பணபரிவர்த்தனைக்கு கூடாத நட்சத்திரம்
பணவரவுக்கு கூடாத நட்சத்திரங்கள்,,,,,
மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தில் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இன்று பார்க்கும் முக்கியமான விஷயம் பண வரவு செலவு. நாம் பணம் வாங்கி அல்லது பணம் கொடுத்து கட்ட முடியாமல் தவித்தாலும், வாங்க முடியாமல் தவித்தாலும், அதற்கு எளிமையான சில கால அட்டவணைகள் உள்ளது. இந்த அட்டவணை காலங்களில் பணப்பரிவர்த்தனை செய்தால் நம்முடைய பணம் திரும்ப நம் கைக்கு வராது .அல்லது அந்த குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பணம் கடன் வாங்கினால் அதை நம்மால் திருப்பி செலுத்த முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும் .அப்படி கூடாத நட்சத்திரங்களில் எல்லாம், யாரும் கடன் பெறுவதும், கடன் கொடுப்பதும் கூடாது. மீதி குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பணம் கொடுக்கல்-வாங்கல் வைத்தால் அந்தப் பணம் நம் கை க்கு வந்து சேருவதும் . அந்த கடனை அடைப்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கும் ,அதேபோல் இந்த கூடாத நட்சத்திரங்களில் முக்கியமான பயணங்கள் வெளிநாட்டு பயணங்கள் ,சுற்றுலா பயணங்கள் .முதல்முறையாக செல்லக்கூடிய ஆலய தரிசனம். செல்லக்கூடிய தூரதேச பயணங்கள் தவிர்ப்பது நல்லது. நம் உடலில் ஏற்படக்கூடிய வியாதிகளுக்கு நாம் அதற்கு மேற்கொள்ளக்கூடிய சிகிச்சைகளை இந்த குறிப்பிட்ட நட்சத்திரம் நடக்கும் காலகட்டத்தில் தேர்வு செய்தால் அல்லது மருத்துவமனையை நாடி சிகிச்சை எடுத்துக் கொண்டால் எவ்வித பலனும் கிடைக்காது. அவர் பல ஆண்டுகள் மருத்துவம் பார்த்துக் கொண்டேதான் இருப்பார் நோய் தீராது. என்று நம் பெரியவர்கள் கூறியுள்ளார்கள் நண்பர்களே.
கீழே கூடாத நட்சத்திரங்களை பதிவிட்டுள்ளேன் ......
இந்த நட்சத்திரங்களில் பணம் வரவு செலவு செய்வதை தவிர்க்கவும், அதாவது கடன் பெறுவதும் ,கடன் கொடுப்பதோ கூடாது ,தூரதேச பயணங்கள் கூடாது. புதிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது கூடாது, சுபகாரியங்கள் செய்வதற்கான ஆயத்தமாவதும் கூடாது. அதாவது துவங்குதல் தொடக்கம் கூடாது.
பரணி ,கார்த்திகை .திருவாதிரை. ஆயில்யம். பூரம். பூராடம் .பூரட்டாதி .கேட்டை. விசாகம் .சித்திரை, சுவாதி. மகம் .இந்த 12 நட்சத்திரங்களில் நாம் பணம் கொடுத்தால் வராது, வாங்கினால் கட்ட முடியாது. பயணம் செய்தால் தடை ஏற்படும், புதிய சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்காது .நண்பர்களே எதையும் துவங்கும் முன் இந்த நட்சத்திரங்களை கவனித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் ,குருவே சரணம் ராம்சரவணன்
Comments
Post a Comment