அபூர்வ வாசி ரகசியம்

 #அபூர்வ வாசி ரகசியம்


விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.


இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.


இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.


நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்


நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும்

காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி

சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக

இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்

காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக

மழைக் காலங்களில் இயற்கையாகவே

சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில் அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது

இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.


ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும்

சமநிலையில் இருக்க வேண்டும்.இதில்

எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில்

பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு

சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று

நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்

சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள்

தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்

மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால்

ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க

ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்

ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள்

உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது

16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12

அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும்,

உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு

கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்

நடைபெறுகிறது. சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக

இச்சை நீங்கும்.


10 அங்குலமாக குறைந்தால் ஞானம்

உண்டாகும்.


9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.


8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி

காண்பான்.


7 அங்குலமாக குறைந்தால் ஆறு

சாஸ்திரங்கள் அறிவான்.


6அங்குலமாக

குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.


5 அங்குலமாக குறைந்தால் காய சித்து

உண்டாகும்


4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து

உண்டாகும்.


3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட

சஞ்சாரம் உண்டாகும்.


2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு

கூடுபாய்தல் சித்திக்கும். அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்,


உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை

அன்னபாணம் நீங்கும்


இந்த சூரிய சந்திரக்கலை மூச்சு

ஓட்டங்களால் நமது உடம்பில் உள்ள

குண்டலினி சக்தி உடலின் தட்பவெப்ப

நிலையில் 98.4 டிகிரியாக ஒரே சீருடன்

வைத்து உடலை இயங்கச் செய்கிறது. இந்தத்

தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு

பிராணிகளின் உடல் வெப்பநிலைகள்

வெவ்வேறு விதமாக அமைகிறது. ஒவ்வொரு

ஜீவன்களிலும் உறைந்து உள்ள குண்டலினி

சக்தியானது அந்த அந்த உடலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைச் சீர்படுத்தி சமமாக

இயங்கச் செய்கிறது. அதாவது உயிர்களின்

இயக்கத்தை குண்டலினி சக்தியே

நடத்துகிறது.


முறைப்படியான யோகாப்பியாசம் செய்து

சுழுமுனை நாடியை இயங்கச் செய்யும்

யோகிகளுக்கு சுவாசம் இருநாசிகளிலும்

சமமாக ஓடும். யோகாப்பியாசத்தில் நின்று

பன்னிரெண்டு ஆண்டுகள் இந்திரியத்தை

வெளியேற்றாமல் பிரம்மச்சரியம்

கடைபிடிப்பவாகளுக்கு மேதாநாடி இயங்க

ஆரம்பிக்கும். இப்படி மேதாநாடி இயக்கத்தில்

இருக்கும் நபர் முந்தைய பிறவியில் இனிவரும்

பிறவி வினைப்படி அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை அறியக்கூடிய முக்கால

ஞானமும் ஏற்படும்.


இவர்களுக்கு ஜீவசக்தியானது ஓஜஸ்

சக்தியாக மாறி தேஜஸ் ஆக வெளியப்படும்.

இடகலை பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி,

லட்சுமி, மேதா ஆகிய ஆறு நாடிகளும் புருவ

நடுவில் உள்ள ஆஞ்ஞா சக்கரத்தில்

சந்திக்கின்றன. இந்த ஆறு நாடிகளும்தான்

நமது உடலில் உள்ள 100க் கணக்கான

நாடிகளையும் நரம்புகளையும் ஏதோ ஒரு

விதத்தில் சம்பந்கப்படுத்தி இயங்க

வைக்கிறது. எனவே தான் பதஞ்சலி யோக

சூத்திரத்தில் புருவ மத்தியில் கவனம்

செலுத்தி தியானம் செய்யும் படி கூறப்பட்டு

உள்ளது. அப்படி நாம் தியான யோகத்தைப் பழகும்

போது இயற்கையாகவே பிரம்மச்சரிய

ஒழுக்கம் வந்தமையும் இத்தகைய

பிரம்மச்சரிய நெறி உடனடியாக வரவில்லை

என்றாலும் படிப்படியாக கண்டிப்பாக

வந்தமையும். அப்படி படிப்படியாக

வந்தமையும் காலகட்டத்திற்குள்ளேயே சில

மந்திரப் பயிற்சிகளை நாம் எடுத்துக்

கொண்டால் ஆவிகளுடன் மேலும் அமானுஷ்ய

சக்தியைப் பெறலாம். ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்