யந்திரத்திற்கு உரிய பாடலும் மந்திரமும்

 #யந்திரத்திற்கு உரிய பாடலும் மந்திரமும்


காப்பு :


அகரம் முதல் உகார மெய்ப்பொருளே காப்பு


ஐங்கரனும் வல்லபயாம் சக்தி காப்பு


எகாரமதில் எழுந்தருளும் சிவமே காப்பு


எண் திசை எங்கும் நிறைந்த பராபரமே காப்பு


சுகாதித்தம் என்னும் ஜோதி காப்பு


சுத்த பரிபுரணமாம் தேவி மனோன்மணி காப்பு


செகம் புகழும் மெஞ்ஞான குரு தேசிகனெ காப்பு


செந்தமிழுக்கு உதவும் சிவ சுப்பிரமணியம் காப்பு


          - இதனை ஒரு முறை மனதில் தியானம் செய்து கொண்டு பின்பு பாடலை பாடவேண்டும்.


பாடல்


அரன் இடபாகம் கொலுவிருக்கும் அம்மை உமையே பார்வதியே


திரளாத கன்னியாகுமரி என்னை தினமும் காக்கும் பராபரயே


பரத்தின் மொருவரசு சங்கு சக்தி கைலாச ஈஸ்வரி செல்வி துர் ஆசை போக்க


என் முன்னே வருவாள் திரிபுரயீஸ்வரியே!


          ஓம் திரிபுர சுந்தரி சௌந்தரி திரிலோக நாயகி


          தீப ஒளி பிரகாச ரூபி திவ்விய வாலை பரமேஸ்வரி


          திருஷ்டாந்திரம் சொற்ணம் தனம் தருக ஸ்வாகா.


ஆசனம் தாமரை அங்கேயும் தாமரை ஆறக்கும் மெய்ப்பாதம்


பூசிய கொங்கை முகிள இளம் தாமரை பூமுகம்


கோசம் அபிராபி அம்மை வாசம் முகமாக வருவாள் திரிபுரயீஸ்வரி


கோதை அபிராமி அம்மை வாசம் முகமாக வருவாள் திரிபுரயீஸ்வரியே


            அகண்ட ஆகாச பிராணத்துவ சொரூபி அம்மே


            ஆதி புவனை அம்பிகையே செகஜோதி சிதம்பர செல்வி


            எந்தன் செம்பொன் கயிலை நாயகியே


            சுகஞான தீப ஒளியான சுயம் பிரகாச வெளியாளே


            ஏகாச்சர பரிபூரணியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


பஞ்சாட்சரத்தில் பத்மாசனத்தில் பாக்கியமான பராசக்தி


அஞ்சு முகத்தில் அதீத சக்தி அம்பா சிதம்பர ஈஸ்வரி செல்வி


சகல பாவமும் தீர்த்தருளும் சச்சிதானந்த பூரணியே


            சத்துரு சங்காரம் செய்தருளும் சாம்பவி தேவி சடாதரியே


            புத்திரன் சொல் தமிழுக்கு இறங்கு புவனை வாலை மனோன்மணியே


           நித்திய கலியாய் நிணைவுள் நிற்கும் நீதிவேத பிராமணியே


           உத்தமி தேவி சிவ சக்தியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே 


சதிர் முக வாலை சௌந்தரியே சச்சிதானந்த பூரணியே 


ஜோதி பிரகாச தீப ஒளியாளே சொல் விம்மி நின்ற பராசக்தி


கதிரவன் ஒளி போல் நின்றிடும் கன்னியாகுமரி பகவதியே


பதினாறு அருளுக்கும் மெய்பபொருளாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


            அட்ட அபதானம் சொல்லம்மே ஆதி சிதம்பர செல்வி


             துட்ட பயல்களை கொன்றே உயிர்வாங்கும் சடாதரி தேவி


      எந்தன் கூட்டில் வந்து என் குருவாய் நின்று குறையாத வாழ்வு தரும் தாயே


      தொட்டது தங்கமயமாக வருவாள் திரிபுரயீஸ்வரியே


அட்டகாளி என்று உன்னை வாழ்த்தி அர்ச்சித்து பூஜிக்க அருள் தருவாய் 


             பட்ட மரங்கள் தழுப்து எப்போ பரமன் கயிலை நாயகியே


             நெட்டூர பாவிப் பயல்கள் உடல் நிறுபொடியாக்கும் நேமி அம்மே


             திட்டாய் சோறன்னம் தரவேணும் திரிபுரயீஸ்வரியே


ஆகாச பிராணத்துவ சொரூபி அம்மையே ஆறக்கும் பேரிய பொருளே


என் தேக சரீர சுகமாய் நித்தம் தெரிசனம் தந்தருளும் தேவிசக்தி


சாகாதிருக்கும் சாம்பவியே சௌபாக்கிய லட்சுமியாய் வளர் செல்வி


            ஆயிரம் கோடி சந்திரன் சூரியன் போல அருகே வந்தென்னை காப்பவளே


            சுயம் பிரகாச தீப ஒளியாளே சுந்தர சௌந்தர சக்தி


            காயபுரி கோட்டையுள் நின்றிடும் கன்னியாகுமரி பகவதியே


            வியதுலகு தெரியாது ரகசியமாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


ஆலகால விசம் நாசம் செய் ஆதி பரமசிவன் தேவி


கோல பிசாசை கொன்றே உயிர் வாங்கும் கோதை அபிராபி சிவகாமி


சூல கபாலியே என் சுந்தரியே சூரிய பிரகாச சுக சக்தி


வாலை புவனை சௌந்தரியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


               ஆறக்கும் மெய்ப்பொருளால் செல்வி அமுதவரு கனியே


                காக்கும் பரமசிவ சொரூபி கருணையானந்த பூரணியே


                தீர்க்காயுள் பெருக தரும் தேவி தில்லை சிதம்பர தாண்டவியே


                பொற்கொடி வாலை மனோன்மணியாய் வரவாள் திரிபுரயீஸ்வரியே


அங்கையில் பாசாங்கிசம் அபயம் பிரமமாகவும்


ஒங்கார மகா மேரு கிரியாகி ஓம் நமோ பகவதி வாலையம்மே


திங்கள் இளம் பிறை முடி சூடிடும் தினகர சொரூப சக்தி 


மங்காத தீப ஒளியாகி வருவாள் திரிபுரயீஸ்வரியே


              ஆனந்த கயிலை நாயகியே ஆதி ஜோதி சிதம்பரியே


              வான தேவ லோக வசீகர சக்தி சிவகாமி மனோன்மணியே


              ஓம் நமசிவய மந்திரத்தில் ஒளியாய் நின்ற பராசக்தி


              நான்முகன் பேய்கள் நடுங்கச் செய் நல்லருள் திரிபுரயீஸ்வரியே


சங்கரன்புரம் எரிக்கின்றபோது சக்தியாய் நின்ற சாம்பவியே


எங்கும் ஒரு ஜோதி சிதம்பரியாய் எழுந்தருளும் தேவி சிவ சக்தியே


ஓங்கார பிரணவ தீப ஒளியாய் நின்ற பராசக்தியே


சிங்க வாகனத்தின் மேலேறி வருவாள் திரிபுரயீஸ்வரியே


            அன்னை புவனை அம்பிகை தேவி ஆளி கனக சபை அருளே


            கன்னி திரிசூலி காளியம்மா கனதனம் பொழியம் காரணியே


            என்னிரு கண்முன் எழுந்தருளும் ஏகாச்சர பரிபூரணியே


            முன்னின்ற ஜோதி மனோன்மணியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


அகண்ட பரிபூரணி என் ஆத்தாளே ஆயி மகமாயி


சுகஞான தீப ஒளியான சூரிய பிரகாச ரூபி அம்மே


செகம்புகழும் செம்பொன் சடாதரி செந்தமிழுக்கு இறங்கும் செல்வி


எந்தன் பகைஞரை கொன்று உயிர் வாங்கி வருவாள் திரிபுரயீஸ்வரியே


ஆபத்து காக்கும் அழகம்மா ஆதி ஜோதி சிதம்பரியே


முப்பது முக்கோடி தேவர்களுக்கு முக்தி கொடுக்கும் முக்கண்ணியே


சுய  ஹீ வாலை சிதம்பரியே சூரிய பிரகாச ரூபி அம்மையே


தீப ஒளியாய் என் முன் வருவாள் திரிபுரயீஸ்வரியே


              நித்திய சொற்ணமயம் நடம்புரியம் நிஷ்களமாகிய சிவன் தேவி


              நேத்திரத்தின் பரொளியாகி நெஞ்சகமே் பொருந்த நிற்கும் தேவி


             புத்திர களத்திர சௌபாக்கியம் தந்தருளும் புவனை வாலை சிதம்பரியே


            போற்றும் மெய் அடியாருக்கு அருள வருவாள் திரிபுரயீஸ்வரியே


அடடா சாத்திய மெய்பொருளே ஆதிபரமசிவன் தேவி


துட்ட தேவதை கண்டே பயந்தோட தானாகி நின்ற பராபரையே


எட்டு கோணத்தில் ஏகாச்சரத்தில் எம தூதர் நசிந்தோட எழுந்த அம்மையே


வட்டத்துள் நின்றாடி வருவாள் திரிபுரயீஸ்வரியே


அதித மெய்ஞான சொரூபி அருள் தரும் பரமசிவன் தேவி


உதிககின்ற கதிரவன் ஒளி போல் உள்ளும் புறமும் நின்ற செல்வி


சதிர்வேத சிகாமணியே மனோன்மணியே


நீதியில்லாரை கொன்று உயிர் வாங்கி வருவாள் திரிபுரயீஸ்வரியே


           எங்கும் பிரகாசமாய் எழுந்த செல்வி ஏவலை போக்கிடும் ஏகசக்தி


           தங்கும் நாத பிரமமே என் தாயே வாலை மனோன்மணியே


எங்கும் வேத பரம்பொருளே பாக்கியமான பராபரையே


திங்கள் இளம் பிறை சூடி வருவாள் திரிபுரயீஸ்வரியே


அன்னம் சொற்ணம் பரவிக் கிடக்கும் ஆனந்த கயிலை நாயகியே


தென்குமரி பகவதி தேவி தெய்வீகமாய் வளரும் அம்மையே


பொன்னிற மாது தன் நெஞ்சகமே நின்றாடிய பூரணியே


முன்னின்ற ஜோதி சிதம்பரியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


              ஆயிரத்தெட்டு தன வட்டத்தின் மேல் அருளாகி நின்ற சிவசக்தி


              காயாபுரி கோட்டையுள் நின்ற கற்பூர தீப ஒளியாளே


              தூய பரிசுத்த பரிபூரணியே துட்ட பிசாசு பயந்தோட என் முன்னே


               மெய்ஞான தெய்வ சொரூபியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே


ஆல இலை துயிலும் மால்தங்கையே ஆதி சுந்தர சௌந்தரியே


நீல காளி புவனை அம்பிகை நித்ய கல்யாணி என் அம்மையே


குலாவு சந்திரன் நூறு சடைமுடியாளே கூத்தாடிய குமரி பகவதியே


சூல கபாலம் கை பிடித்து வருவாள் திரிபுரயீஸ்வரியே


             அழகிய சொக்கரிடம் வாழ்ந்திடும் அம்மை மீனாட்சி அதி சக்தி


             கோள் பகை நாசம் செய் கோவில் கும்ப தரிசனம் தரும் தேவி


             ஊழ்வினை பறந்தோட என் முன் உதிக்கின்ற ஜோதி சிதம்பரியே


             வாள் கடகம் சூலம் கைபிடித்து வருவாள் திரிபுரயீஸ்வரியே


ஐம்பூதங்கள் அடங்கி ஒடுங்க செய்வாய் சிவகாமி சௌந்தரியே


பொய் உடல் உள்ளே பொருந்தி நின்றாடிய பொன்னின் மணி பொற்கொடியே


தூய பரிசுத்த தீப ஒளியாளே துட்ட தேவதையை துரத்தி அடித்து 


நித்தம் மெய் சிவமாய் என் முன் வருவாள் திரிபுரயீஸ்வரியே


நேத்திரம் சுத்தி அறிவேன் செம் பொன்னிற அம்பிகா தேவி


நித்தியம் சொற்ணம் தனம் கொண்டு வருவாள் திரிபுரயீஸ்வரியே


மூவர்க்கும் தேவர்கும் முதல் பொருளே முக்கன் பகவதி வாலையம்மே


கோவித்து பேசுவேன் நாவடங்க கோடி சூரியன் போல வளர்தேவி


சிவன் உயிராய் நின்ற சிற்ப பரத்தி சிவ சிதம்பர காளியே நீ 


எந்தன் நாவில் நின்று விளையாடி வருவாள் திரிபுரயீஸ்வரியே 


          அஞ்செட்டு மூன்றுக்கும் முதல் பொருளே ஆதி புவனை அம்பிகை


          நெஞ்சகமே வஞசனை சூனியம் செய்தோர் உயிரை வாங்கும் 


          பரமசிவன் தேவி


         பஞ்சாட்சரத்தில் பதவி தர வருவாள் திரிபுரயீஸ்வரியே


ஆதார பாத கமலாசனத்தில் அறம் வளர்த்திடும் ஆண்டவன் தேவி


பூத பிரேத பிசாசை தீயிட்டு எரிக்கும் பூரணியே வாலை சிதம்பரியே


நித்தம் நெறிமுறையில்லா மூடருடல் நிறுபொடியாக்கும் நீலிகாளியே


மாதவம் காக்க என் முன்னே வருவாள் திரிபுரயீஸ்வரியே 


அறுபத்து நான்கு சித்தும் விளைடும் அம்மை உமையே பார்வதியே


இருதய தீப ஒளியாளே எ ன்தன் இருவினை போக்கும் சிவசக்தி


சர்வ இந்திராணி என் சாம்பவியே சர்வ ஆபரணபுரணியே


திரிசூலம் கையில் பிடித்துக்கொண்டு வருவாள் திரிபுரயீஸ்வரியே


          


மூலமந்திரம்


ஓம் ஐயும் கிலியும் சவ்வும் றீம் ஹீம் நமசிவய


திரிபுரயீஸ்வரி தேவி தினகர நாயகி தீர்க்காயுசு உண்டாக சுவாஹா


ஓம் ஹீம் வாலை புவனை திரிபுரயீஸ்வரி தேவி


வாக்கு மனதில் வருக வருக


மந்திர சித்தி காரிய சித்தி வாக்கு பலிதம் தன வசியம்


தருக தருக சிவயநம சுவாஹா.


அர்ச்சனை செய்யும் விதம்


1. ஓம் ப்ரக்ருக்தாய நம                                     2. ஓம் விக்ருக்தாய நம


3. ஓம் வித்யாயை நம                                       4. ஓம் சர்வ பூத கித பிரப்தாய நம


5. ஓம் ச்ரத்தாய நம                                            6. ஓம் விபூத்யை நம


7. ஓம் சுரப்யை நம                                             8. ஓம் பரமாத்தியாயை நம


9. ஓம் வாசே நம                                                10. ஓம் பத்மாயை நம


11. ஓம் பத்மாலாயை நம                               12. ஓம் சூசயே நம


13. ஓம் சுவாகாயை நம                                   14. ஓம் சுவதாயை நம


15. ஓம் சுதாயை நம                                          16. ஓம் தன்யாயை நம


17.ஓம் கிரண்யாயை நம                                 18. ஓம் லட்சுமியே நம


20. ஓம் விபாவர்யை நம                                  21. ஓம் அதித்யை நம


22. ஓம் ததித்யை நம                                         23. ஓம் தீபதய நம


24. ஓம் வசுதாய நம                                           25. ஓம் வசுதாய நம


26. ஓம் கமலாய நம                                          27. ஓம் காந்தாய நம


28. ஓம் காட்சியை நம                                      29. ஓம் க்ரோத சம்பவாய நம


30. ஓம் அனுக்கிரக பிரதாய நம                   31. ஓம் புத்தய நம 


32. ஓம் அநகாய நம                                          33. ஓம் அரிவல்லபாயை நம


34. ஓம் லோக சோக விநாசின்யை நம   35. ஓம் அமிருதாய நம


36. ஓம் தீப்தய நம                                              37. ஓம் லோக சோக வினாசின்யை நம


38. ஓம் தர்ம நிலயாயை நம                         39. ஓம் கருணாய நம


40. ஓம் லோக மாத்ரே நம                              41. ஓம் பத்ம பிரியை நம


42. ஓம் பத்ம ஹஸ்தாய நம                         43. ஓம் பத்மாஷ்யை நம


44. ஓம் பத்ம சுந்தர்யை நம                           45. ஓம் பத்மோபவாயை நம


46. ஓம் பத்ம முக்ஞை நம                             47. ஓம் பத்மநாப பிரியாயை நம


48. ஓம் ரமாயை நம                                         49. ஓம் பத்ம மாலாதராயை நம


50. ஓம் தேவியை நம                                      51. ஓம் பத்மின்யை நம


52. ஓம் பத்ம கந்திந்யை நம                          53. ஓம் புண்ணிய கந்தா நம


54. ஓம் சுப்ரசந்தாய நம                                  55. ஓம் பிரசாதாபி முக்ஞை நம


56. ஓம் பிரபாயை நம                                      57. ஓம் சந்திர வததாயை நம


58. ஓம் சந்திராயை நம                                   59. ஓம் சந்திரசகோதர்யை நம


60. ஓம் சதுர் புஜாயை நம                              61. ஓம் சந்திர ரூபாயை நம


62. ஓம் இந்திராயை நம                                  63. ஓம் இந்து சீதாலய நம


64. ஓம் ஆஹ்லாதஜநன்யை நம               65. ஓம் புஷ்ட்யை நம


66. ஓம் சிவாயை நம                                       67. ஓம் சிவகர்யை நம


68. ஓம் சத்யை நம                                            69. ஓம் விமலாயை நம


70. ஓம் விச்வ ஜநன்யை நம                        71. ஓம் மனோன்மணியே நம


72. ஓம் தாரித்ரிய நாசின்யை நம               73. ஓம் ப்ரிதி புஷ்கரின்யை நம


74. ஓம் சாந்தய நம                                           75. ஓம் திரிபுரியே நம


76. ஓம் ச்ரியை நம                                            77. ஓம் பாஸ்கரியை நம


78. ஓம் பில்வநிலயாயை நம                       79. ஓம் வராரோகாய நம


80. ஓம் யசஸ்வின்யை நம                           81. ஓம் வசுந்தராயை நம


82. ஓம் உதாராங்காயை நம                          83. ஓம் ஹரிண்யை நம


84. ஓம் ஹேம மாலின்யை நம                   85. ஓம் தனதான்யகர்யை நம


86. ஓம் சத்தயே நம                                           87. ஓம் ஸ்தைரண சவும்யாயை நம


88. ஓம் சுபப்ரதாயை நம                                 89. ஓம் திருவேச்ம சுதாநந்யை நம


90. ஓம் வரலெட்சுமியே நம                          91. ஓம் வசுப்ரதாய நம


92. ஓம் சுபாய நம                                               93. ஓம் உறிரண்ய ப்ரகராயை நம


94. ஓம் சமுத்ர தன்யாயை நம                    95. ஓம் ஜயாயை நம


96. ஓம் மங்களாய நம                                     97. ஓம் தேவியாயை நம


98. ஓம் விஷ்ணு வாசஸ்தல விதிதியாயை நம


99. ஓம் விஷ்ணுபதந்யை நம                       100. ஓம் பிரசன்னாஸ்யை நம


101. ஓம் நாராண நமாச்ரிதாயை நம          102. ஓம் காயத்ரியை நம


103. ஓம் சர்வ உபத்திரவ நிவாரண்யாயை நம


104. ஓம் நவதுர்காயை நம                              105. ஓம் சக்தியை நம


106. ஓம் மகா காளியை நம                             


107. ஓம் தரிகால ஞான சம்மந்நாயை நம


108. ஓம் புவனேச்வரியை நம                       


        ஓம் சமயபுரத்தாளே நம


        ஓம் சோட்டானிக்ரை பகவதியே நம


        ஓம் மண்டைக்காடு பகவதியே நம


        ஓம் கன்னியாகுமரி பகவதியே நம


       ஓம் திரிபுரயீஸ்வரியே நம  


அன்னையின் பல பெயர்களை சொல்லி வழிபடுதலே அர்ச்சனை  என்று பெயர். ஓம் சக்தி நம ஓம் சக்தியே நம என்று 108 தடவை சொல்லலாம். 


சுக்கலாம்பிரதரம் விஷ்ணும் சசிவர்ணம் 

சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்னோப சாந்தயே

அதிபிராப்த ஏவுங்குண விசேனே வசிஸ்டாயாம்

அஸ்யாம் வர்த்தமானாயாம் (பெயர்) ............... நவுமியாகிரகம் (நட்சத்திரம்) .............

நட்சத்திரம் யுக்தாயாம் சர்வ பீடா பரிகார்த்தம் 

சர்வ பீஷ்டா அத்யார்த்தம் 

பகவதி பிரசாத சித்யார்தம் 

பகவதி அஷ்டோத்தரம் நமார்ச்சனம் அரிஸே.


      அர்ச்சனைக்கு பின் மேற்கண்டவாறு சொல்லி பூஜை முடிக்கவும். நமக்கா சொல்லும் போது நமது பெயர் நட்சத்திரம் போட்டு உச்சரிக்கவும். பிறருக்காக செய்யும் போது அவர்களது பெயர் நட்சத்திரம் சொல்லவும். நட்சத்திரம் தெரியாவிட்டால் யதார்த்த நட்சத்திரம் என உச்சரிக்கவும்.


    அமாவாசை அல்லது வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பூஜையை தொடங்கவேண்டும். நாம் வணங்கும் தெய்வத்தின் உருவம் கிழக்கு நோக்கி இருக்கும்படி அமைத்து நாம் வடக்கு நோக்கி ஒரு பலகையின் மீது அமர்ந்து வழிபடவேண்டும்.


    முதல் நாள் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு பாயாசம் வைத்து வழிபடுங்கள். விபூதி குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள் எழுதிய யந்திரத்திற்கு குங்குமம் இட்டு சிறிது சர்வதேவதா வசிய மையை மத்தியில் தொட்டு வைத்து யந்திரத்தை அம்பாள் உருவத்தின் பக்கத்தில் வைக்கவும்.


    பிள்ளையார் படம் வைத்து தீபம் ஏற்றி ஊதுவத்தி சாம்பிராணி பொருத்தி மின்சார விளக்கை அனைத்து விடுங்கள். தீப ஒளி மட்டும் வழிபாட்டிற்கு ஏற்றது.


     முதலில் கீழ்க்கண்டவாறு வினாயகரை வணங்கவேண்டும்.


அரிஓம் திரிபுர சங்கரா விக்னேஸ்வர ரூபா

டம் டம் சரணம் உன்னை நாம் நம்பினே்

வா வா கணபதி மகா கணபதி 

என் நாவிலும் வாக்கிலும் வந்து நிற்க சிவா

    - 3 முறை சொல்லி சிறிது விபூதியை வினாயகர் முன் போடுங்கள்.

பின்பு 

ஓம் பால கணபதியே நம

ஓம் சக்தி கணபதியே நம

ஓம் த்ருண கணபதியே நம

ஓம் பக்தி கணபதியே நம

ஓம் விக்ணேஸ்வர ரூபாயை நம

ஓம் மகா கணபதியே நம

    - என ஒவ்வொரு முறை சொல்லி முடியம்போது சிறிது விபூதி வினாயகர் முன் போடவும்


பின்பு குரு வணக்கம் 3 முறை சொல்லி தியானித்து பூமியை தொட்டு வணங்கி பின்பு திசை கட்டு மந்திரம் சொல்லி கண்களை மூடி அம்பாளை மனதில் தோன்ற முயற்ச்சி செய்ய வேண்டும்.


    அதன்பின்பு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு வேண்டுவனவற்றை வேண்டிவிட்டு கற்பூர தீபம் காண்பித்து பூஜையை முடிக்கவும்.


    இவ்வாறு 48 நாட்கள் செய்து 48 வது நாள் சேவலின் கால்விரலை பிளேடால் கீறி 3 சொட்ட ரத்தபலி காட்டவேண்டும். அத்துடன் நமக்கு பகவதி சித்து கிடைத்துவிடும். 48 நாட்கள் பூஜை தடைபடுமானால் மீண்டும் பூஜை ஆரம்பிக்கவேண்டும்.


41 தினங்கள் நாம் சித்தி பெற்றதற்கான அறிகுறிகள்


அன்னையின் அருள் உருவம் நாம் நினைத்தபோது நமது கண்முன் தோன்றும்நாம் சொல்பவை யாவும் பலிக்கும்நாம் தொட்ட காரியங்கள் விருத்தியாகும்பிறருக்கு நாம் எக்காரணம் வேண்டி தகடு தாயத்து கொடுக்கிறோமோ அவை பலிக்கும்நாளை நடக்கப்போகும் சம்பவங்களை இன்றே உணர முடியும்.ஒருவரை உற்றுப் பார்த்தால் அவர் மனதில் உள்ளவை நமக்கு புரியும்உடம்பில் தேஜஸ் தோன்றும்மற்றவர்கள் நமக்கு அதிக மரியாதை செலுத்துவதை காணலாம்.பல மாற்றங்கள் தெரியவரும்நமது ஒன்றிய நிலைக்கு ஏற்ப அன்னையிடம் நேரில் பேசும் நிலை ஏற்படும்சித்தி பெற்றதற்கான அடையாளங்கள் அனுபவத்தில் உணரமுடியும்


    அன்னையின் அருளால் தாங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.


        நீங்கள் வழிபடும் அன்னையின் திருஉருவப்படம் இளமையான தோற்ம் உள்ளதாக இருப்பது அவசியம். ஒரு தெய்வத்தை சித்தி செய்து கொண்டால் மற்ற தெய்வங்களுக்கு உரிய காரியங்களையும் சாதிக்கமுடியும். மாந்திரீகம் கற்றுக்கொள்கிறோம் என்பதை பிறரிடம் கூறாமல் இருப்பது நல்லது. பிறரிடம் கர்வமாக பேசக்கூடாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.


           பெரியவர்களை மதிக்கவேண்டும். பிறர் நம்மை ஏசினாலும் கூட பொருத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். யாராவது நம்மை ஏசி விட்டார்கள் என்ற உடயேயே நாம் மந்திரத்தால் அவர்களுக்கு கெடுதல் செய்ய எண்ணக்கூடாது. ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்